ஜியோ 5ஜி அறிவிப்பு - விரைவில் சோதனை துவக்கம்

41 Views
Editor: 0


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்..

                                  ஜியோ 5ஜி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ஜியோவின் 5ஜி சேவை பற்றிய அறிவிப்பு வெளியானது.

முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஜியோ 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கிறது. விரைவில் இதற்கான சோதனை துவங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது ஜியோவின் மேட் இன் இந்தியா 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இதன் சேவைகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

முதற்கட்டமாக இந்திய சந்தையில் வெளியானதும், வெளிநாடுகளுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.