Moto G 5G ப்ளஸ்: `குறைவான விலை; சிறப்பான வேகம்’ - மோட்டோரோலாவின் 5G மேஜிக்

81 Views
Editor: 0

இந்த மொபைல் மூலம் இன்னும் குறைவான விலையில் 5G தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட்டை மக்களுக்கு எடுத்துவர முற்பட்டிருக்கிறது அந்த நிறுவனம்..

                     Moto G 5G பிளஸ்

இந்த மொபைல் மூலம் இன்னும் குறைவான விலையில் 5G தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட்டை மக்களுக்கு எடுத்துவர முற்பட்டிருக்கிறது அந்த நிறுவனம்.

மோட்டோரோலா நிறுவனம் அதன் புதிய Moto G 5G ப்ளஸ் மாடலை இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. உலகின் விலை குறைந்த 5G போனாகக் கருதப்படும் இது அங்கு 349 யூரோக்களுக்கு விற்பனைக்கு வரவிருக்கின்றது. இது இந்திய மதிப்பில் சுமார் 29,000 ரூபாய்.

 

Moto G 5G பிளஸ் Moto G 5G பிளஸ் 

Moto G 5G ப்ளஸ் ஸ்பெக்ஸ்:
6.7-இன்ச் FHD+ பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே

குவால்கம் ஸ்னாப்டிராகன் 765 5G புராசஸர்

6 GB வரை RAM

128 GB வரை ஸ்டோரேஜ்

5,000mAh பேட்டரி

20W USB-C TurboPower சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 10

ஃபிங்கர்பிரின்ட் சென்சார்

48-MP மெயின் கேமரா, 5-MP மேக்ரோ கேமரா, 8-MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2-MP டெப்த் சென்சார்

16-MP செல்ஃபி கேமரா

சமீபத்தில்தான் Motorola Edge+ என்ற பிரீமியம் 5G போனை அறிமுகப்படுத்தியிருந்தது மோட்டோரோலா. இந்த மொபைல் மூலம் இன்னும் குறைவான விலையில் 5G தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட்டை மக்களுக்கு எடுத்துவர முற்பட்டிருக்கிறது அந்த நிறுவனம். இது சாத்தியமானதற்கு இன்னொரு முக்கிய காரணம் புதிய ஸ்னாப்டிராகன் 765 புராசஸர். 5G சப்போர்ட்டுடன் வரும் இந்த மிட்ரேஞ்ச் சிப் சமீபத்தில்தான் அறிமுகமானது.

இந்த மொபைல் குறித்து மோட்டோரோலா நிறுவனம் "இந்த Moto G 5G plus மாடலானது 4G, 5G என இரு நெட்வொர்க்கிலுமே சிறப்பாகச் செயல்படும். ஸ்னாப்டிராகன் 765 புராசஸர் இருப்பதன் காரணத்தால் சாதாரண பிரவுசிங் முதல் வீடியோ ஸ்ட்ரீமிங் வரை அனைத்திலும் வேகத்தை உங்களால் உணர முடியும்" என்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இன்னும் 5G வரவில்லைதான், இருந்தாலும் அடுத்த சில வாரங்களில் இது இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.