ஆகஸ்ட் 24 ஆம் தேதி அறிமுகமாகப்போகும் மோட்டோரோலா தொலைபேசியின் பெயர் வெளியானது!
மோட்டோரோலா தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பெயரை வெளியிடாமல் பிளிப்கார்ட் பட்டியல் பக்கத்துடன் சமூக ஊடகங்களில் டீசர்களை வெளியிட்டு வந்தது. ஆனால் பிளிப்கார்ட் பட்டியல் பக்கத்தின் URL மூலம் அந்த போனின் பெயர் இப்போது வெளியாகியுள்ளது.
அந்த போன் பெயர், ‘மோட்டோ G9’ என்று பிளிப்கார்ட் பக்கத்தின் URL மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. ஆம், இதுதான் மோட்டோரோலா மறைத்து வைத்திருந்த ‘பெரிய விஷயம்’. ஸ்மார்ட்போன், அதிகாரப்பூர்வ டீஸர்களின் படி ஆகஸ்ட் 24 (12PM IST) அன்று அறிமுகமாகும். URL மோட்டோ G9 என்று கூறினாலும், ஒரே ஒரு தொலைபேசியா அல்லது முழுத் தொடரும் இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் இரண்டு தொலைபேசிகள் மோட்டோ G9 பிளஸ் மற்றும் மோட்டோ G9 ப்ளே.
ஜீக்பெஞ்சில் வெளியான விவரக்குறிப்புகளைப் பார்க்கலாம். மோட்டோரோலாவின் வரவிருக்கும் மோட்டோ G9 ப்ளே 6.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். 1.8GHz வேகத்தில் குவால்காம் செயலியில் தொலைபேசி இயங்கும். செயலியைப் பொறுத்தவரை குவால்காமின் ஸ்னாப்டிராகன் 600-சீரிஸாக இருக்கலாம். தொலைபேசியில் 4 ஜிபி ரேம் இருப்பதாக கூறப்படுகிறது. பெஞ்ச்மார்க் பட்டியலின்படி, மோட்டோரோலா G9 ப்ளே ஆண்ட்ராய்டு 10 உடன் இயங்கும்.
மோட்டோ G9 பிளஸ் 4,700 mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்பட உள்ளது. XT2087-1 மற்றும் XT2087-2 மாடல் எண்கள் காணப்பட்டதால் தொலைபேசி பல விருப்பங்களில் கிடைக்கும். இதுவரை வதந்திகளின் அடிப்படையில், மோட்டோ G9 பிளஸ் ஆண்ட்ராய்டு 10 உடன் வழங்கப்படும். இது 277 யூரோக்கள் (தோராயமாக ரூ.24,000) விலைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசி 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் என்று வதந்திகள் பரவியுள்ளது. தொலைபேசியில் அதிக ரேம் மற்றும் சேமிப்பக விருப்பங்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது.