பிரைவசி பயம் இனி தேவையில்லை சாம்சங் ஸ்மார்ட்போனில் அசத்தும் Alt Z life வசதி அறிமுகம்:
புகைப்படங்கள், வீடியோக்களை ரகசியமாக பாதுகாக்கலாம் சாம்சங் ஸ்மார்ட்போனில் அட்டகாசமான Alt Z life வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம்.
ஸ்மார்ட்போனில் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை ரகசியமாக பாதுகாக்கும் வகையில் Alt Z life எனும் அட்டகாசமான வசதியை சாம்சங் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-
சாம்சங் நிறுவனம் அறிமுகம்
ஸ்மார்ட்போன் இப்போது அனைவரிடமும் இருக்கும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஸ்மார்ட்போனை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது யாராவது 'உனது போனை கொஞ்சம் கொடு...', என்று கேட்டால் ஒரு நிமிடம் நமது மனம் யோசிக்கவே செய்யும். ஒருவேளை நமது செல்போனை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டால்கூட, 'அவர்கள் என்ன பார்க்கிறார்கள்? நாம் ரகசியமாக வைத்திருக்கும் தகவல்களை பார்த்து விடுவார்களா? என்ற சந்தேகம் நம்மிடம் தோன்றும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டா, தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு சுலபமான வழி இருந்தால் எப்படி இருக்கும்? ஸ்மார்ட்போனை குடும்ப உறுப்பினர்களிடமோ, நண்பர்களிடமோ தைரியமாகக் கொடுக்கலாம், பிரைவசிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் எப்படி இருக்கும்? நினைத்தாலே அட்டகாசமாக இருக்கிறது தானே? இனி உங்கள் பிரைவசி பாதுகாப்புக்கான அற்புதமான அம்சங்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
Alt Z life வசதி
ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலேயே ஒரு புதிய புரட்சியை சாம்சங் நிறுவனம் புகுத்தி இருக்கிறது. Quick switch மற்றும் Content suggestions என்ற புதுவித யுத்திகள் சாம்சங்கின் Galaxy A51 மற்றும் Galaxy A71 என்ற ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் உலகில் நமது பிரைவசியை பயமில்லாமல் பாதுகாக்க உதவும் Alt Z life எனம் மேற்பட்ட அம்சத்தை சாம்சங் நிறுவனம் கையாண்டு இருக்கிறது. Alt Z life உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் உங்களது பிரைவசியான தகவல்கள் மீது மற்றவர்களின் தலையீடு உறுதியாக இருக்காது.
அந்த வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக Alt Z life எனும் பிரைவசி பாதுகாப்பு அம்சத்தை சாம்சங் நிறுவனம் பயன்படுத்தி, தனது Galaxy A51, Galaxy A71 ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
பிரைவசியில் பாதுகாப்பு
இன்றைய தலைமுறையினர் வானத்துக்குக் கீழே உள்ள எல்லாவற்றையும் தங்களது ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுக்கிறார்கள். எல்லாத் தகவல்களையும் கூகுளில் தேடுகிறார்கள். கண்ணில் காணும் அனைத்தையும் நண்பர்களுடன் பகிர்கிறார்கள். பல்வேறு விளையாட்டுகளில் செல்போனில் விளையாடி மகிழ்கிறார்கள். ஆனாலும் தங்களது ஸ்மார்ட் போனில் பல தகவல்களை ரகசியமாக வைக்கவே விரும்புகிறார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள், நண்பர்களின் அரட்டை என தங்களது தனிப்பட்ட விஷயங்களை பிறர் பார்க்கக் கூடாது என்றே விரும்புகிறார்கள். ஸ்மார்ட்போனில் மூழ்கி இருக்கும் சமயங்களில் திடீரென நமது உறவினர்கள், நண்பர்கள் ஏன் நமது சுட்டி சகோதரர்கள் கூட செல்போனை கேட்டால் போதும், மறுக்கத்தான் தோன்றுகிறது. ஏனெனில் நமது செல்போனை வாங்குவோர், அதிலுள்ள நமது தனிப்பட்ட விஷயங்கள் மீது கவனம் செலுத்த கூடும் என்பதால் தான்... எனவேதான் நமது செல்போனிலேயே சில App-கள் மூலம் புகைப்படம், வீடியோக்களை ரகசியமாக password போட்டு வைத்திருப்போம். ஆனால் Alt Z life என்ற பிரைவசி அம்சத்தை பயன்படுத்தும்போது, நமது செல்போன்களில் மற்றவரிடம் கொடுக்க தயங்கவே வேண்டாம்.
Galaxy A51, Galaxy A71
சாம்சங் Galaxy A51, Galaxy A71 ஸ்மார்ட்போன்களில் secure folder என்ற option கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை notification மூலம் enable செய்து கொள்ளலாம். அப்போது தனியாக ஒரு folder தோன்றும். அந்த folder-ல் நாம ரகசியமாக வைக்க விரும்பும் தகவல்களை வைத்துக் கொள்ளலாம். இத்தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும்.
Content suggestions:-
இது முக்கியமான சிறப்பம்சமாகும். இது ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஸ்கேன் செய்யும். Seen detection மற்றும் face detection என்று ஸ்கேன் செய்தலும் இரு வகைப்படும். Seen detection என்பது பிரைவசிக்கு உரிய வாய்ப்புகள் இருக்கும் புகைப்படங்களை அதுவே தெரியப்படுத்தும்.
Face detection-ல் நாம் ஒரு நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டால் போதும், செல்போனில் அந்த அந்த நபரின் அனைத்து புகைப்படங்களும் அடுத்த நொடியே ஸ்கேன் செய்யப்பட்டு தனி folder-க்கு சென்றுவிடும். இதுதவிர Galary-ல் இருந்து தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாமே தேர்வு செய்தும் secure folder-க்கு அனுப்ப முடியும்.
Quick switch, content suggestions
Quick switch - செல்போன்களை அடிக்கடி மேஜையில் விட்டு செல்லவோ அல்லது உங்கள் செல்போன்களை மற்றவர்களுக்கு அவ்வப்போது பயன்படுத்த தருபவர்கள் இனி பிரைவசி குறித்து கவலைப்பட வேண்டாம்.
திடீரென நமது செல்போனை யாராவது கேட்டால் power switch-ஐ 2 தடவை press செய்து விடலாம். உடனடியாக private mode-ல் இருந்து general mode-க்கு செல்போன் மாறிவிடும். உதாரணமாக private mode-ல் யூ-டியூப்பில் ஒரு சினிமா பாடல் காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது யாராவது செல்போன் கேட்கும்போது, உடனடியாக power switch-ஐ 2 தடவை தட்டிவிட்டால் அடுத்த நொடியே general mode மாறி யூ-டியூப்பில் சமையல் குறித்த வீடியோ ஒளிபரப்பாகும். Power switch-ஐ 2 தடவை அழுத்தினாலும் பாஸ்வேர்டு இல்லாமல் நமது செல்போனில் பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.