ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதை தொடர்ந்து எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ரிவோல்ட் அதன் ஆர்வி300 மற்றும் ஆர்400 பைக்குகளின் டெலிவிரியை சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் துவங்கியுள்ளது.
சென்னையில் இந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தின் டீலர்ஷிப் மையங்கள் அண்ணாநகர் மற்றும் வேளச்சேரி பகுதியில் உள்ளன. அகமதாபாத்தில் நரோடா மற்றும் ஹிமாலயா மாலில் ஷோரூம்களை ரிவோல்ட் நிறுவனம் நிறுவியுள்ளது.
இவை மட்டுமின்றி இந்நிறுவனத்தின் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே டெல்லி மற்றும் புனே நகரங்களில் விற்பனையை துவங்கிவிட்டன. இவற்றுடன் கடந்த மார்ச் மாதத்தில் மேலும் சில நகரங்களுக்கும் தனது சந்தையை விரிவுப்படுத்த ரிவோல்ட் திட்டமிட்டிருந்தது.
ஆனால் அதற்குள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்த கூடுதல் நகரங்களில் சென்னை, ஐதாராபாத், மும்பை மற்றும் அகமாதபாத் உள்ளிட்டவை அடங்கும். இதில் முதலாவதாக அகமதாபாத்தில் கடந்த பிப்ரவரி 29ல் இருந்தும், சென்னையில் மார்ச் 5ஆம் தேதியில் இருந்தும் இந்த இரு பைக்குகளின் விற்பனை ஆரம்பமாக இருந்தன.
இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில், ஆர்வி400 பைக்கிற்கான காத்திருப்பு காலம் 5 மாதத்தில் இருந்து 90 நாட்களாக குறைக்கப்படுவதாக அறிக்கை ஒன்று தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியாகி இருந்தது. ஆனால் தயாரிப்பு பணிகள் தடைப்பட்டு போனதால் இன்னமும் இந்த பைக்கிற்கான காத்திருப்பு காலம் 5 மாதங்களாகவே தொடர்கிறது.
ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கு வரம்பற்ற பேட்டரி உத்தரவாதம் (8 வருடங்கள் அல்லது 150,000கிமீ), இலவச பராமரிப்பு (3 வருடங்கள் அல்லது 30,000கிமீ), தயாரிப்பு உத்தரவாதம் (5 வருடங்கள் அல்லது 75,000 கிமீ) மற்றும் இன்ஸ்சூரன்ஸ் (1-வருடம் நிறுவனத்திற்கு சொந்தமானது, 5-வருடம் மூன்றாம்-தரப்பு) உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 3.24KWh 72 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரியானது முழு சார்ஜில் பைக்கை 150கிமீ வரையில் இயக்கி செல்லும். 215மிமீ அளவில் கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்டுள்ள பைக்கின் அதிகப்பட்ச வேகம் 85kmph ஆகும். இதன் பேட்டரியை 15 ஆம்பியர் சாக்கெட்டின் மூலம் 100 சதவீதம் சார்ஜ் செய்ய 4.5 மணிநேரங்கள் தேவைப்படும்.
முழு சார்ஜிற்கு 3 யூனிட்கள் மின்சாரம் செலவாகும். முன்பதிவு செலுத்தாமலும் பைக்கை வாங்கும் முறையை ரிவோல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன்படி ஆர்வி300 பைக்கிற்கு மாதந்தோறும் ரூ.2,999-மும், ஆர்வி400-க்கு 3,999 ரூபாயும் செலுத்த வேண்டிவரும்.
ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் அளித்து வரும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் இணையதளம், அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகளை வாசகர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து வருகிறது. கார், பைக் குறித்த அண்மை செய்திகள், டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டுகள் மற்றும் வீடியோக்களை பெறுவதற்கு எமது WhatsApp, Telegram சேனல்களில் இணைந்திடுங்கள். எமது Facebook, Twitter, Instagram மற்றும் YouTube பக்கங்களுடன் தொடர்பில் இருங்கள்.