இந்தியாவில் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்:

22 Views
Editor: 0

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது..

இந்தியாவில் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்:

 

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை உயர்வின் படி ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 60500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

தற்சமயம் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல்களின் அனைத்து வேரியண்ட்களும் ரூ.150 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 64010 என மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 ஹீரோ ஸ்பிலென்டர் பிளஸ்

முன்னதாக ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 750 வரை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடலில் 97.2சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.8 பிஹெச்பி பவர், 8.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.