ராயல் என்ஃபீல்டின் சர்வீஸ் ஆன் வீல்ஸ் சென்னையில் துவக்கம்

28 Views
Editor: 0

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையினை சென்னையில் துவங்கி உள்ளது..

                            ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஊரடங்கு காலக்கட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் சர்வீஸ் ஆன் வீல்ஸ் எனும் சேவையை அறிவித்தது.

சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை வீட்டில் இருந்தபடி சர்வீஸ் செய்து கொள்ள முடியும். அறிவித்து ஒருமாதம் ஆகிவிட்ட நிலையில், இந்த சேவை தற்சமயம் சென்னையில் துவங்கி உள்ளது.

தற்போதைய தகவல்களின் படி சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு சர்வீஸ் மற்றும் பெரும்பாலான ரிப்பேர்களை வீட்டிலேயே சரி செய்து தரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சேவையை வழங்க ராயல் என்ஃபீல்டு 350 டிரையல் மாடல்கள் டூல்ஸ், ஸ்பேர் மற்றும் இதர உபகரணங்கள் கொண்டு செல்லும் வகையில் ஆல்டர் செய்யப்பட்டுள்ளன. 

 ராயல் என்ஃபீல்டு சர்வீஸ் ஆன் வீல்ஸ்

ஆல்டர் செய்யப்பட்ட விசேஷ சர்வீஸ் மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு சர்வீஸ் மையங்களில் கிடைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும் என்பதோடு சர்வீஸ் மையங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க முடியும். 

சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தலைசிறந்த மோட்டார்சைக்கிள் வல்லுநர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு அனுப்பி, அவர்களது மோட்டார்சைக்கிளை சரி செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.