நடிப்பு, இசைக்கு இடையில் தவிக்கும் ஸ்ருதிஹாசன்

12 Views
Editor: 0

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற ஸ்ருதிஹாசன், நடிப்புக்கும் இசைக்கும் இடையில் தவித்து வருகிறார்..

கமல்ஹாசனை போலவே அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் பன்முக திறமை கொண்டவர். நடிப்பு தவிர, பின்னணி பாடகி, இசை அமைப்பாளர், டப்பிங் கலைஞர், மேற்கத்திய மேடை பாடகி என பல பரிமாணங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனக்கென ஒரு இசைக் குழுவும் நடத்தி வருகிறார். 

 

இதனால் நடிப்பில் அவரால் முழு கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் நடிப்பிலிருந்து விலகியிருந்த ஸ்ருதி சமீபத்தில்தான் விஜய்சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 

 

Image result for shruti haasan

 

ஸ்ருதிஹாசன்

 

இதற்கிடையில் அவருக்கு வெளிநாட்டு மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்தது. சமீபத்தில் லண்டனுக்கு தனது இசைக்குழுவுடன் புறப்பட்ட ஸ்ருதி அங்கு இசை நிகழ்ச்சி நடத்தியதுடன் பாப் பாடகியாக மாறி மேற்கத்திய பாடல்கள் பாடினார். அங்கு இசை நிகழ்ச்சியை முடித்த பிறகு இந்தியா திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து என்று ஒரு சிலர் ஸ்ருதிக்கு அறிவுரை செய்தாலும் இசையிலிருந்து தன்னை பிரித்துக்கொள்ள முடியாமல் நடிப்பும், இசைக்கும் இடையில் தவித்து வருகிறார்.