வெப் சீரிஸில் களமிறங்கும் ஆமிர்கான்

9 Views
Editor: 0

வித்தியாசமான கதாபாத்திரங்களிலும், கேரக்டர்களிலும் தோன்றி வெள்ளித்திரையில் ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தற்போது வெப்சீரிஸில் அறிமுகமாகிறார்..

திரைத்துறையிலிருந்து, டிஜிட்டல் துறையில் பாலிவுட் டாப் நடிகர் ஆமிர்கான் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆமிர்கான் குழுவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புதுமையான கதையம்சத்துடன் கூடிய கதை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தக் கதையை பிரபல முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனத்திடம் அளித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் விதமான இந்தக் கதை ஆமிர்கானின் டிஜிட்டல் பிரவேசத்துக்கு பொருத்தமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, தனது கனவு படைப்பாக கருதும் 'மகாபாரதா' கதையை உருவாக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வரும் ஆமிர்கான், அதை விரைவில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

தற்போது 'லால் சிங் சத்தா' என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ஆமிர்கான். இந்தப் படம் ஹாலிவுட் படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' ரீமேக்காக உருவாகி வருகிறது. படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார். ஆமிர்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆமிர்கான் புரொடக்‌ஷன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

டிஜிட்டல் தளங்களில் களமிறங்கி ரசிகர்களை கவரும் விதமாக தொடர்களை தந்து வெற்றி பெற்ற பாலிவுட் நடிகர்கள் லிஸ்டில் சயீப் அலிகான், ராஜ்குமார் ராவ், நவாஸூதீன் சித்திக் போன்றோர் உள்ளனர். இவர்கள் வரிசையில் தற்போது ஆமிர்கானும் டிஜிட்டல் பக்கம் தன் கடைக்கண் பார்வையை திருப்ப முடிவு செய்துள்ளார்.