‘மேன் VS வைல்ட்’ என்ற நிகழ்ச்சி மூலம் உலக அளவில் பிரபலமானவர் பியர் க்ரில்ஸ் . இவருடன் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் காட்டுக்குள் சென்றுள்ளார்கள். . இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இவருடன் இணைந்து காட்டுக்குள் சென்றார்.
‘இன் டூ தி வைல்ட்’ என்று புதிதாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்காக கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே வனப்பகுதிக்குள் சென்று ஷூட் செய்தார்கள் பின்னர் முள்குத்தியதால் அதிக நேரம் ஷூட்டில் கலந்துக்கொள்ளாமல் ரஜினிகாந்த் திரும்பினார்.
அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி ரிலீஸாக உள்ள தேதியை டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. ரஜினியும் பியர் கிரில்ஸும் இருப்பதுபோன்ற மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் 23-ம் தேதி ரஜினிகாந்தின் காட்டுப்பயணம் டிஸ்கவரியில் ஒளிபரப்பாக உள்ளது.
த்து பியர் க்ரில்ஸ் உடனான காட்டுப்பயணத்தில் இணையப்போகும் அடுத்த இந்திய நட்சத்திரம் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.