"அவ்வளவுதானா" என்று ஒரு ட்வீட்டை போட்டு ரஜினி ரசிகர்களிடம் வாங்கிகட்டிக் கொண்டு வருகிறார் நடிகை கஸ்தூரி! அதே நேரம் கஸ்தூரி ரஜினிக்கு எதிராக போட்ட ட்வீட்டுக்கு ஏகப்பட்ட வரவேற்புகளும் குவிந்து வருகின்றன!
கஸ்தூரியை பொறுத்தவரை அரசியல் ஞானம் உடையவர்.. நல்ல புத்திசாலி.. சமூக விஷயங்களை உற்று கவனித்து, அது குறித்த தன் கருத்துக்களை பதிவிடுபவர்.
பெரும்பாலும் இவரது ட்வீட்கள் வைரலாகிவிடும்.. காரணம் நறுக், சுருக்கென இவர் பதிவிடும் வரிகள்தான்.. சில நேரம் ஒற்றை, இரண்டு வார்த்தைகளில்கூட ட்வீட் போட்டு தெறிக்க விடுவார் கஸ்தூரி. இதனால் இவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறிதான் கமெண்ட்கள் பதிவாகும். அந்த வகையில் ரஜினி சம்பந்தமாக நிறைய ட்வீட்களை இவர் பதிவிட்டுள்ளார்... துக்ளக் விவகாரத்தி8ன்போது, "ஒருவேளை ரஜினி வந்து விட்டால் அதிமுகவை பிஜேபி இரண்டாம் பட்சமாக நடத்தும் என்ற சந்தேகமோ?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.. அதேபோல போர் வரட்டும் என்று ரஜினிகாந்த் சொன்னபோது, "போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது.. நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும்.. வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர்.." என்று ஒரு ட்வீட் போடவும் மொத்த ரசிகர்களும் கொந்தளித்துவிட்டனர்.
அதேபோல நேற்று ரஜினிகாந்த் தந்த பேட்டியில் "டெல்லியில் நடந்து வரும் வன்முறைக்கு உளவுத் துறையின் தோல்வி தான் காரணம்... உளவுத்துறையின் தோல்வி என்றால் அது உள்துறை அமைச்சகத்தின் தோல்வியும் தான். வன்முறையை அடக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்துதான் இன்றும் கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார். "உளவுத்துறையின் தோல்வி காரணமா? அவ்வளவு தானா" என்று 2 வார்த்தைகளை தெரிவித்து கேள்வி எழுப்பி உள்ளார்.. இதனால் கடுப்பாகி போன ரஜினி ரசிகர்கள், அவர்தான் ராஜினாமா செய்யச் சொல்லி இருக்காரே.. கண்ணுக்கு தெரியலயா? இனிமேல்தான் எங்க தலைவரோட ஆட்டம் ஆரம்பம் என்று பதிலளித்துள்ளனர்.
கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த பலரும், "ஸ்க்ரிப்ட்டில் அப்படித்தானே எழுதி தந்திருக்காங்க... எழுதிக் கொடுக்க நேரமானதால்தான் முன்னாடியே ரஜினி மீடியாவை சந்திக்கவில்லை. சும்மா, சும்மா அவரை இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் அவரே கன்ஃபியூஸ் ஆகிடமாட்டாரா? அவர் ஒரு நடிகர், அரசியல்வாதி அல்ல. அவரிடம் என்னத்த பெரிதாக எதிர்பார்க்க முடியும்? மதில்மேல் பூனை எந்த பக்கம் வேனுமின்னாலும் தாவும்.. சினிமாவோட மார்க்கெட்டிங் லாஜிக் அரசியல்ல கம்போஸ் பண்றது ஜெயிக்காது" என்று பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.