இணைய தளத்தில் வெளியாகும் ‘லாக்கப்’

78 Views
Editor: 0

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் வெளியானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்..

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் வெளியானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.
கொரோனா பரவலால் தியேட்டர்களை மூடி 100 நாட்களை தாண்டுகிறது. இதனால் ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்து இருந்த பல படங்களின் தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் சிரமப்பட்டனர். கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலையும் இருந்தது.

இதனால் புதிய படங்களை தியேட்டருக்கு பதிலாக இணைய தளத்தில் நேரடியாக வெளியிட தொடங்கி உள்ளனர். ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் வெளியானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.

வரலட்சுமி நடித்துள்ள டேனி, யோகிபாபு நடித்துள்ள காக்டெயில், அருண் விஜய்யின் ‘வா டீல்,’ ‘மம்மி சேவ்’, ‘அண்டாவ காணோம்’ ஆகிய படங்களும் இணைய தளத்தில் வர உள்ளன. இந்த நிலையில் ‘லாக்கப்’ படமும் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். லாக்கப் படத்தை நிதின் சத்யா தயாரித்துள்ளார்.

இதில் வைபவ் நாயகனாகவும் வாணிபோஜன் நாயகியாகவும் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம்கோபி ஆகியோரும் உள்ளனர். வெங்கட் பிரபு வில்லனாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது.