நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சியுடன் எடுத்துள்ள அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.80, 90களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த குஷ்பு, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பலருடனும் ஜோடியாக நடித்துள்ளர்.பின்னர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக்கொண்டு தமிழ் நாட்டிலேயே செட்டிலான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார். இப்போதும் டிவி, சீரியல், சினிமா என படு பிஸியாக உள்ளார். ஆனாலும் கணவர் மகள்கள் என குடும்பத்தினருடனும் நேரத்தை செலவழிக்க மறப்பதில்லை.
லாக்டவுன் நேரத்தில் பொழுதை போக்க முடியாமல் தவிக்கும் நடிகை குஷ்பு கணவரின் கை வண்ணத்தில் கலக்கல் போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி திணறடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது கணவரான இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சியுடன் எடுத்த புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார். இந்த செல்பியை இயக்குநர் சுந்தர் சி எடுத்ததாக தெரிகிறது. இதில் சுந்தர் சியும் சிரிக்க அவர் மீது சாய்ந்தப்படி குஷ்புவும் சிரிக்கிறார்.
இதனை டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள குஷ்பு, காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை என்றும் என் சிறந்த மருந்து, என் சிறந்த பாதி என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் காதல் சின்னமான ஹார்ட்டின் சிம்பளையும் குறிப்பிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Editor: 0










