தளபதி விஜய்யின் படங்களில் வாய்ப்பு கிடைக்காதா என பலரும் ஏங்கிக் கிடக்கின்றனர். நடிகர்கள் முதல் டெக்னீஷியன்கள் வரை விஜய் படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டால் பெரிய அளவு வளர்ந்து விடலாம் என்ற எண்ணம்.
அப்படி விஜய் படங்களில் எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. நடிகர்களில் பலருக்கும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தால் அந்த படம் ஹிட்டாகி விடும் என்ற எண்ணம் உள்ளது.
நிறைய படங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ஹிட் பாடல்களுக்காகவே வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா, விஜய் கூட்டணியின் முதல் முதலில் உருவான திரைப்படம் புதிய கீதை.
இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் அவரது அண்ணன் கார்த்திக் ராஜா சேர்ந்து பணியாற்றினர். அந்த படத்தில் வெளியான பாடல்கள் அனைத்துமே ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் அளவுக்குத் தான் இருந்தது.
ஆனால் அதன்பிறகு தளபதி விஜய் யுவன்ஷங்கர்ராஜா இசையில் எந்த ஒரு படமும் நடிக்கவே இல்லை. தயாரிப்பாளர் தரப்பும் யுவன் சங்கர் ராஜாவை பரிந்துரை செய்ய வில்லையாம்.
புதிய கீதை படத்தில் சுமாரான பாடல்கள் அமைந்ததாலும், படம் அட்டர் பிளாப் ஆனதாலும் விஜய் தரப்பு யுவன் சங்கர் ராஜாவுக்கு இசையமைக்கும் வாய்ப்பை தறவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஆனால் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியில், தளபதி விஜய் தனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் எனவும், அவரது படங்களுக்கு இசை அமைக்க காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இதுவரை கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் இசையமைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. டார்ச்சல் செய்யாத தயாரிப்பாளர்கள் இருந்தால் மட்டுமே யுவன் வேலை செய்வதாகவும் இன்னொரு கருத்து இருக்கிறது.
இப்ப சினிமாவுக்கு வந்த நண்டு சிண்டு இசையமைப்பாளர்கள் எல்லாம் விஜய்க்கு இசையமைக்கும் நிலையில் மீண்டும் விஜய்-யுவன் கூட்டணிக்கு ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றன.