சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. தியேட்டர் திறந்தவுடன் முதலில் இந்தப் படம்தான் ரிலீஸ் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
வெறும் 19 கோடி பட்ஜெட்டில் உருவாகி தற்போது 100 கோடி அளவுக்கு வியாபாரத்தை முடித்து உள்ளார்களாம். மிகப்பெரிய லாபம் என்கிறது கோலிவுட்.
சூர்யா படத்தை முன்னோட்டமாக வைத்து பெரிய நடிகர்கள் தங்களது படங்களை அடுத்தடுத்து வெளியிட தயாராக காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சூரரைப்போற்று படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியிடப்பட்டது. எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் யூ சான்றிதழ் பெற்றது.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தணிக்கை குழு அதிகாரிகள் வியந்து பார்த்த படம் சூரரைப்போற்று என அவர்களே தெரிவித்துள்ளனர். முன்னதாக சூரரைப்போற்று படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஜூலை23 சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூரரைப்போற்று படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த நாளை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.