தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இளம் நடிகை நிகிலா விமல் ‘கிடாரி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்த படத்தில் தன் யதார்த்தமான நடிப்பின் மூலம் நிகிலா விமல் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்சமீபத்தில் இவர் கார்த்தியுடன் நடித்த ‘தம்பி’ சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, நிகிலா மம்மூட்டி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக, ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப்படத்தின் திரில்லர் கதையில் ஈர்க்கப்பட்டே இந்த அறிமுக இயக்குனருக்கு மம்முட்டி, தனது படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்துள்ளார் மம்முட்டி. மேலும், இவர் சில காலம் முன்பு வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் அடக்கம் ஒடுக்கமாக இருந்தன.
ஆனால், தற்போது நகர் புற பெண்ணான தோற்றத்தில் மிக அழகாக வலம் வருகிறார் அம்மணி. சமீபகாலமாக மார்டன் ஆடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து மிக அழாகான தோற்றத்தில் காட்சி தருகிறார் நிகில விமல் தற்போது இவரது புகைப்படம் இனையதில் வலம் வருகிறது.