அடடே சிவகார்த்திகேயன், அவர் மனைவியா இது? சின்னவயதிலேயே ஜோடியா இருந்து இருக்காங்க பாருங்க…!

101 Views
Editor: 0

சிவகார்த்திகேயன் இன்று தமிழில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவருக்கு குழந்தைகள் வட்டாரத்தில் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. .

சிவகார்த்திகேயன் இன்று தமிழில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவருக்கு குழந்தைகள் வட்டாரத்தில் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஜய் டிவியில் போட்டியாளராக தன் வாழ்வை தொடங்கி தொகுப்பாளர் ஆக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

திருச்சியில் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த சிவகார்த்திகேயன் மிமிக்கரி உள்பட தன்னிடம் இருந்த தனித்தன்மையால் இந்த நிலையை எட்டி இருக்கிறார். இயக்குனர் பாண்டிராஜ்ன் மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது சிவகார்த்திகேயன் டாக்டர் என்னும் படத்தில் நடித்து வந்தார். கரோணா பிரச்னையால் அது இன்னும் முடியாமல் கிடப்பில் இருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி தாஸ் உடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். சின்ன வயதில் இருந்தே ஒன்றாகவே வளர்ந்து உள்ளனர். இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயன் அவரது மனைவியோடு சிறுவயதில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது