போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கன்னிமாடம் திரைப்படம் தற்போது டிஜிட்டல் மூலமாகவும் பட்டையைக் கிளப்ப துவங்கியுள்ளது.
KanniMaadam Digital Release Details : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராக வலம் வருபவர் போஸ் வெங்கட். மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகி கன்னிமாடம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தியேட்டர்களில் ரிலீசாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதனையடுத்து தற்போது புக் மை ஷோ என்ற டிஜிட்டல் தளத்திலும வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் தி அல்லி ஆப் என்ற தளத்திலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கிரிக்கெட் வீரர் அஸ்வினையும் விட்டு வைக்காத வேட்டி கட்டு – அவர் செய்த வேலையை நீங்களே பாருங்க.!
நேற்று தான் இந்த தி அல்லி ஆப் என்ற தளத்தில் இப்படம் வெளியானது. அதற்குள் இந்த படத்தை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கன்னிமாடம் என்ற திரைப்படம் டிஜிட்டல் ரிலீஸிலும் பட்டையை கிளப்ப தொடங்கியுள்ளது. சமூக சிந்தனையுள்ள திரைப் படமாக இப்படம் உருவாகி உள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டிலும் படம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் வெப்சைட் மூலமாகவும் இப்படத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.