“சிம்புவை பற்றி குறை சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது!” 

14 Views
Editor: 0


சிம்புவும், டைரக்டர் வெங்கட்பிரபுவும் நீண்ட கால நண்பர்கள். சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இருவரும் இணைந்து வேலை செய்யும் முதல் படம், இது..

“சிம்புவை பற்றி குறை சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது!” டைரக்டர் வெங்கட்பிரபு சொல்கிறார்.

சிம்புவுடன் பணிபுரிந்த அனுபவங்களை வெங்கட்பிரபு பகிர்ந்து கொண்டார்.

“சிம்புவை எனக்கு பல வருடங்களாக தெரியும். நான் இயக்கிய ‘சென்னை-28’ படத்தில், ‘சரோஜா சாமானிக்கோலா” பாடலை ‘கிளைமாக்ஸ்’க்கு முன்னால் வைக்கும்படி ‘ஐடியா’ கொடுத்தவர், அவர்தான். அந்த படத்தின் மதுரை ஏரியாவை விற்பதற்கு உதவி செய்தவரும் அவர்தான். அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. அது இப்போதுதான் நனவாகி இருக்கிறது.

சிம்பு ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்று பேசப்படுகிறது. அவரை வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தடையும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறேன். அவரை பற்றி மற்றவர்கள் குறை சொல்வது, ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார், வெங்கட்பிரபு!