பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் பாண்டியநாடு, சுந்தர பாண்டியன், கொம்பன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இயக்குநர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில் படக்குழு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது கீழே தவறி விழும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்காததால் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வீடியோ கடந்த மாதம் பதிவிட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த வீடியோ பதிவிடப்பட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் லட்சுமி மேனன் பெயரில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ பக்கம் என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் இப்பக்கத்தில் லட்சுமி மேனனின் புகைப்படங்கள் மற்றும் சில நடன வீடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.