ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் நம்பர்-1 ஹீரோ விஜய் தான்.. 

11 Views
Editor: 0

ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் நம்பர்-1 ஹீரோ விஜய் தான்.. சல்மான் கான், ஷாருக்கான் எல்லாம் ஓரமா போங்கப்பா!.

தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களில் ரஜினிக்கு பிறகு தற்போது இந்திய அளவில் அதிக அளவு மார்க்கெட் வைத்திருக்கும் நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய்.

சமீபகாலமாக விஜய்யின் படங்கள் மொழி தெரியாத வட இந்தியாவிலும் கணிசமான வசூலை ஈட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு ரசிகர் பட்டாளங்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றன.

இந்நிலையில் எவரும் செய்யாத சாதனை ஒன்றை இந்த ஊரடங்கு சமயத்தில் நிகழ்த்தி காட்டியுள்ளார் தளபதி விஜய். இந்திய அளவில் பெரிய ஹீரோவாக இருப்பவர்களையே ஓரம்கட்டி உட்கார வைத்துவிட்டார்.

 

இந்த ஊரடங்கு சமயத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில் விஜய்யின் படங்களே அதிக மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக அகில இந்திய தொலைக்காட்சி நிறுவனம்(BARC) வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய்யின் படங்கள் சுமார் 117.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது. வட இந்தியாவில் பெரிய ஹீரோக்கள் என சொல்லப்படும் ஷாருக்கான், சல்மான்கான் யாருமே இந்த லிஸ்டில் இல்லை.

 

விஜய்யை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் 76.2 மில்லியன் பார்வையாளர்களையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 65.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளனர். தொடர்ந்து அக்ஷய்குமார், பிரபாஸ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

BARC-Official

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல அஜித் இந்த லிஸ்டில் இடம் பெறாமல் போனது அஜித் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.