‘சித்தி 2’ சீரியலில் வில்லி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது:
‘சித்தி 2’ சீரியலில் நடந்த முக்கிய மாற்றம் - பிரபல நடிகை வெளியிட்ட தகவல்
கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்த போதும் சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. கொரோனா அச்சுறுத்தல் ஒருபுறமிருந்தாலும் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றன.
இதனால் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ‘சித்தி 2’ சீரியல்களில் சில நடிகர்கள் மாற்றப்பட்டிருப்பதாக அத்தொடரில் நடிக்கும் ராதிகா சரத்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி பொன்வண்ணனுக்கு பதிலாக நிழல்கள் ரவி, ஷில்பாவுக்கு பதிலாக ஜெயலட்சுமி ஆகியோர் நடித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து இத்தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஸ்ரீஷா ஆந்திராவில் இருப்பதால் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு பதிலாக மீரா கிருஷ்ணா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கும் மீரா கிருஷ்ணா, ராதிகா சரத்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.