சினிமா படப்பிடிப்புகளை தொடங்க அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த பாரதிராஜா

15 Views
Editor: 0

சினிமா படப்பிடிப்புகளை துவங்குவதற்கு  ஒப்புதல் வாங்குவது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை  இயக்குனர் பாரதிராஜா தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பெரியத்திரை படப்பிடிப்புகள்,  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து அனுமதி பெறுவதற்காக பாரதிராஜா, கே.ராஜன், சுரேஷ் காமட்சி மற்றும் சத்யஜோதி தியாகராஜன்ஆகியோர் அமைச்சரை நேரில் சந்தித்து பேசினர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா, எங்களுடைய கஷ்டங்களை அமைச்சரிடம் சொல்லியிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்றும் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள திரையரங்கம் திறப்பது குறித்தும், முன்னதாக எடுத்து வைத்த படங்களை வெளியிடுவது தொடர்பாகவும் பேசி இருப்பதாகவும் தெரிவித்தார்.