ஜெய்க்கு ஜோடியாகும் தொகுப்பாளினி திவ்யா துரைசாமி

18 Views
Editor: 0

நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க தொகுப்பாளினி திவ்யா துரைசாமி ஒப்பந்தமாகியுள்ளார்..

ஜெய்க்கு ஜோடியாகும் தொகுப்பாளினி திவ்யா துரைசாமி:-

நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க தொகுப்பாளினி திவ்யா துரைசாமி ஒப்பந்தமாகியுள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. கடந்த ஆண்டு ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் திவ்யா துரைசாமி சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
ஏற்கெனவே செய்தி வாசிப்பாளராக இருந்து திரைத்துறையில் நடிகையான ப்ரியா பவானி சங்கர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் திவ்யா துரைசாமியும் ஹீரோயினாக கால் பதிக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை பேச இருக்கிறது. மேலும் கொரோனா காலத்தில் கிராமத்தில் நடந்த சுவாரஸ்யங்களை இந்தப் படத்தில் கதையாக அமைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரதிராஜா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் மற்றொரு நாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் அஜீஸ் இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். கே.வி.துரை தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கென்னடி கிளப்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் விக்ரம் பிரபுவை வைத்து இயக்க திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் பாரதிராஜா, ஜெய், திவ்யா துரைசாமி நடிக்கும் இந்தப் படத்தை முதலில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார் சுசீந்திரன்.