பிடித்த பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடிய ஆல்யா மானஷா - சஞ்சீவ் சூப்பர் கமெண்ட்
சீரியல் நடிகை ஆல்யா மானஷா தனக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடி அதை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராஜா ராணி சீரியல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஆல்யா மானஷா. அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ‘அய்லா சையத்’ என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தை அடுத்து கர்ப்பமானதால் சீரியல்களில் நடிக்காமல் இருந்த ஆல்யா மானஷா தற்போது மீண்டும் விஜய் டிவியின் சீரியலில் நடிக்க தயாராகி வருவதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சீரியலை ராஜா ராணி தொடர் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்க இருப்பதாகவும் ஆல்யா மானஷா தெரிவித்திருந்தார்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆல்யா மானஷா, அவ்வப்போது தனது குட்டிக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது ‘நட்பதிகாரம்-79’ படத்தில் தேவா பாடிய, ‘சொல்லு சொல்லு செல்லம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
மனைவி பதிவிட்ட நடன வீடியோவுக்கு கமெண்ட் பதிவிட்டிருக்கும் சஞ்சீவ், “உன்னுடைய நடனத்தை மிஞ்ச எந்த ஒரு பெண்ணும் கிடையாது” என்று கூறியுள்ளார்.