தனது கல்லூரி நண்பர்களுடன் வீடியோ Call பேசிய விஜய்…! வைரலாகும் புகைப்படம்…!
கோலிவுட்டின் மிகச் பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் – தளபதி விஜய். தனது ஒவ்வொரு அசைவிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார். அனைத்து விஜய் ரசிகர்களும் அவரது மாஸ்டர் படத்துக்காக Waiting – இல் இருக்கையில், தளபதி விஜய் தனது நெருங்கிய நண்பர்களுடன் வீடியோ காலில் உரையாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் தனது அடுத்த திட்டமான தளபதி 65 படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பணியாற்றக்கூடும் என்று பலவிதமான யூகங்கள் உள்ளன.
மாஸ்டர் படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது, ஆனால் தியேட்டர்கள் உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் சில மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்த திரைப்படத்திற்கான சர்வதேச மக்களிடமும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.