பாகுபலியாக சந்தானம், கட்டப்பாவாக மொட்ட ராஜேந்திரன் - கலகல காமெடியுடன் வெளியான ‘பிஸ்கோத்’ட்ரெய்லர்

13 Views
Editor: 0

சந்தானம் நடித்திருக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது..

பாகுபலியாக சந்தானம், கட்டப்பாவாக மொட்ட ராஜேந்திரன் - கலகல காமெடியுடன் வெளியான ‘பிஸ்கோத்’ட்ரெய்லர்:

 

சந்தானம் நடித்திருக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் தென்னிந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜசிம்மன் என்ற மன்னராக சந்தானம் நடித்துள்ளார். இது ஒரு கற்பனையான கதாபாத்திரமாகும். மன்னர் லுக்கில் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் காட்சிகளை ஸ்பூப் செய்து நகைச்சுவையாக காட்சிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். கட்டப்பாவாக மொட்டை ராஜேந்திரனும் காமெடியில் கலக்கி இருக்கிறார். பாகுபலி படத்தில் ராணா வில்லனாக நடித்திருந்தது போல் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தில் ஆனந்தராஜ் நடித்துள்ளார். மேலும் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா விழிப்புணர்வு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ட்ரெய்லரில் இறுதியாக திரையரங்குகள் திறக்க லேட் ஆனால் என்ன செய்வது என்று ஆனந்தராஜ் அரசவையில் அமர்ந்து கேட்க, ஓடிடி தான் என்கிறார் லொள்ளு சபா மனோகர். அதற்கு கவுண்டர் கொடுக்கும் சந்தானம், ஓசி ஐடி வைச்சிருக்குற திமிர்ல பேசுறியா என்று அவரை அடிக்கிறார். இதன் மூலம் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று நகைச்சுவையாக சொல்லியிருக்கிறது படக்குழு.