மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அமேசானில் ரிலீஸ் ஆகிறதா.? 

12 Views
Editor: 0

மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அமேசானில் ரிலீஸ் ஆகிறதா.? வெளியான போஸ்டரால் பரபரப்பு.. படக்குழு அதிரடி விளக்கம்.

மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அமேசானில் ரிலீஸ் ஆகிறதா.? வெளியான போஸ்டரால் பரபரப்பு.. படக்குழு அதிரடி விளக்கம்:

 

Master release in amazon Film crew description : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதற்குப் திட்டவட்டமாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா கௌரி கிஷன், சாந்தனு பாக்கியராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.

ஊரடங்கு காரணத்தால் திரையரங்குகள் திறக்கப்படாமல் திரையுலகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அதனால் படத்தை பல தயாரிப்பாளர்கள் OTT இணையதளத்தில் வெளியிட முடிவு எடுத்து வருகிறார்கள், ஏனென்றால் கடனை வாங்கி படம் எடுத்தவர்களுக்கு வட்டி அதிகமாகிக் கொண்டே போகிறது அதனால் இந்த முடிவை பல தயாரிப்பாளர்கள் எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் OTT இணையதளத்தில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் ஒரு சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட வருகின்றன, அந்தவகையில் மாஸ்டர் திரைப்படமும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என பல்வேறு தரப்பில் கூறப்பட்டது ஆனால் படக்குழு திரையரங்கில் தான் ரிலீஸ் செய்யப்படும் என உறுதியாகக் கூறினார்கள்.

அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது மாஸ்டர் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் என பிரபலOTT இணையதளம் அறிவித்துள்ளது அதனால் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள், ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது, அதனால் பலரும் சந்தேகம் அடைந்துள்ளார்கள்.

இந்த நிலையில் மாஸ்டர் அமேசான் ரிலீஸ் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது, அமேசானில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் கொரியா படம் என்றும் அது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில் மாஸ்டர்  திரைப்படம் திரையில் தான் வரும் என உற்சாக சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.