வலிமை ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் பற்றிய படக்குழுவின் புதிய திட்டம் :
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர் -அஜித்-எச்.வினோத் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே சினிமா படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. மீண்டும் நிலைமை எப்போது சீராகும் என்பது தற்போதுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சினிமா படப்பிடிப்புகள் தொடங்கப்படாததால் வலிமை ஷூட்டிங் துவங்குவது அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பிரச்னை சரியான பின்னர் படப்பிடிப்பை துவங்கலாம் என்று படக்குழு காத்திருந்தாலும் தொடர்ந்து தாமதமானால் வலிமை திரைக்கு வர அடுத்த வருடம் இறுதி கூட ஆகலாம்.
அஜித் மற்றும் படக்குழு வலிமை படத்தின் ஷூட்டிங்கை வரும் நவம்பர் மாதம் துவங்கலாமா என்று பரிசீலித்து வருவதாக தெரிகிறது. நவம்பரில் ஷூட்டிங் தொடங்கப்பட்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.