கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ராகுல் பிரித்தி சிங் ...சரிவருமா...?

41 Views
Editor: 0

தெலுங்கில் உருவாகவுள்ள கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது..

ஐதராபாத்

கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ராகுல் பிரித்தி சிங் ...சரிவருமா...?

 

வாழ்க்கை வரலாற்று படங்கள் வெற்றிகரமாக ஓடி, சாதனை படங்களாக அமைகின்றன. எனவே அந்த படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு சமீபகால உதாரணமாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்‘ படத்தை கூறலாம். இந்த வரிசையில் அடுத்து, வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது. கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஆவார். இவருடைய வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படமாகிறது. சஞ்சனா ரெட்டி டைரக்டு செய்கிறார். 

 

சத்யநாராயணா, கொனா வெங்கட் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் கர்ணம் மல்லேஸ்வரி வேடத்தில் நடிக்க நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, பிரீத்தி சிங் ஆகிய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நான்கு பேரில் ஒருவர் கர்ணம் மல்லேஸ்வரியாக நடிப்பார்கள் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

 

அவரது பிறந்த நாளான ஜூன் 1-ம் தேதி, அவருடைய வாழ்க்கைக் கதை படமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கோனா வெங்கட் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்க, இந்தப் படத்தை சஞ்சனா ரெட்டி இயக்கவுள்ளார். இதன் பணிகள் நடைபெற்று வந்தன. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகவுள்ளது.

 

இதில் கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கவுள்ளது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வந்தது. 

 

தற்போது கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்க ராகுல் பிரித்தீ சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் தீவிரமாக இயங்குபவர் ராகுல் பிரித்தீ சிங். ஆகையால் இந்த பயோபிக்கில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.