10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ் - ஹன்சிகா..!

45 Views
Editor: 0

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். பட்டாஸ் படத்தைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்..

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ் - ஹன்சிகா..!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். பட்டாஸ் படத்தைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

இதனை முடித்துவிட்டு 'ராட்சசன்' இயக்குநர் ராம்குமார், மித்ரன் ஜவஹர் ஆகியோரது படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதில் தனுஷ் - மித்ரன் ஜவஹர் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் தனுஷ் - மித்ரன் ஜவஹர் இணைந்து பணிபுரிந்துள்ளனர். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ளது.

இந்தப் புதிய படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலமாகவே ஹன்சிகா தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷ் - ஹன்சிகா நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.