இசையமைப்பாளர் தமன் ஸ்டூடியோவில் திருட்டுத்தனம்? இணையத்தில் வெளியான வீடியோ

47 Views
Editor: 0

Iragi Iragi Song Promo Video : யூடியூப் சேனல் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் ஜம்கட் ஹரி பாஸ்கர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது..

இசையமைப்பாளர் தமன் ஸ்டூடியோவில் திருட்டுத்தனம்? இணையத்தில் வெளியான வீடியோ :

 

Iragi Iragi Song Promo Video : யூடியூப் சேனல் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் ஜம்கட் ஹரி பாஸ்கர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது இவர் இசையமைப்பாளர் தமனின் ஸ்டுடியோவில் திருட்டுத்தனமாக சென்று ஒரு பாட்டு பாடுவது போல ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு படத்திற்கான ப்ரோமோ வீடியோ.

ஆம், ரிதுன் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் படம்தான் நினைவோ ஒரு பறவை. இப்படத்தில் இடம்பெறும் இறகி இறகி என்ற பாடலுக்கான ப்ரோமோ வீடியோ தான் இது.

இந்தப்பாடலை ஓசோ வெங்கட் மற்றும் ஹரி பாஸ்கர் ஆகியோர் பாடியுள்ளனர். மைண்ட் ட்ராமா புரோடக்சன் என்ற யூடியூப் பக்கத்தில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்தப் ப்ரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இசையமைப்பாளர் தமன் அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.