சூப்பர் ஸ்டாரின் 45 ஆண்டுகள் திரைப்பயணத்தில் கிடைத்த வெகுமதி!!
45 Years Of Rajinism : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப் பயணத்தை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
இவருடைய 45ஆவது திரைப் பயணத்தை கொண்டாடும் விதத்தில், மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டாராக மாறியதற்கு காரணம் என்னவென்றால், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், பஞ்ச் வசனங்களாலும், தனது ரசிகர்களை சந்தோசப்படுத்துவதே மிக கவனமாக இருந்தார்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஐகான் ஆப் தமிழ் சினிமா” என்றும் ரஜினியின் காமன் டிபி-ஐ வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு, பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் “5 டிகேட், 45 ஆண்டுகள், ஒரு அடையாளம், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே” என தனது ட்விட்டர் பக்கத்தில் காமன் டிபியை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்தின் 45ஆவது திரை கொண்டாட்டத்தை ரசிகர்கள், இந்த காமன் டிபி மூலம் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியிட்டதாகவும், இனி தான் ட்ரெய்லர், மெயின் பிக்சர் என பல சர்ப்ரைஸ் அடங்கி உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர்.