ஆம்பூரில் முழு ஊரடங்கு மீறி இயங்கி வந்த தனியார் காலணி தொழிற்சாலைக்கு வருவாத்துரையினர் சீல் வைத்தனர்.
வாணியம்பாடி ஆக 9 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பாங்கி ஷாப் பகுதியில் தனியார் காலணி(பாலார் ஷுஸ்) தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அரசின் உத்தரவு மீறி பணியாட்களை கொண்டு தொழிற்சாலை இயங்கி வந்ததால் வட்டாட்சியர் பத்பநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.