மாஸ்டர் படக்குழு கொடுக்கும் அடுத்த ட்ரீட் – வெளியானது செம அப்டேட்!
Quit Pannuda Song Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேட்டன், ஸ்ரீநாத், சஞ்சீவ், மகேந்திரன், தீனா என பலர் இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திய படமாக இருந்து வருகிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வாத்தி கம்மிங், ஒரு குட்டி ஸ்டோரி, அந்த கண்ண பார்த்தாக்கா என பல பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தப் பாடல்களை தொடர்ந்து அடுத்ததாக Quit பண்ணுடா என்ற பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது இப்பாடலுக்கான சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் படக்குழு இந்த பாடலை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் தூக்கங்களை தினவிழா அன்று விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் காத்திருக்கிறது என எதிர்பார்க்கலாம்.