இந்திய சினிமாவின் பெருமை கமல்: 61 வருடங்கள் பற்றி நட்சத்திரங்கள் நெகிழ்ச்சியான பதிவு

14 Views
Editor: 0

நடிகர் கமல் சினிமாவுக்கு வந்து 61 வருடங்கள் ஆவதை பற்றி பிரபலங்கள் பலரும் பேசி இருக்கிறார்கள். அதன் ஸ்பெஷல் தொகுப்பு இதோ...

இந்திய சினிமாவின் பெருமை கமல்: 61 வருடங்கள் பற்றி நட்சத்திரங்கள் நெகிழ்ச்சியான பதிவு:

 

நடிகர் கமல் சினிமாவுக்கு வந்து 61 வருடங்கள் ஆவதை பற்றி பிரபலங்கள் பலரும் பேசி இருக்கிறார்கள். அதன் ஸ்பெஷல் தொகுப்பு இதோ..

கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படம் வெளி வந்து ஆகஸ்ட் 12 நாளையோடு 61 வருடங்கள் ஆகிறது அதை கொண்டாடும் விதமாக கமல்ஹாசனின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் கமல்ஹாசனின் இந்த சாதனையை கொண்டாடும் விதமாக ஒரு காமன் டிபி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பதிவிட்டு பல பிரபலங்கள் கமல்ஹாசன் சாதனையைப் பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்கள். அவற்றைப் பற்றி பார்ப்போம்...

காஜல் அகர்வால் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில், "நமது உலக நாயகன் செய்திருக்கும் சாதனை அது நிகரற்றது, வேறு யாரும் இதை செய்யவில்லை. இதை கொண்டாடுவோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபல பாடலாசிரியர் விவேக் பதிவிட்டு இருப்பதாவது.. "ஆகஸ்ட் 12 களத்தூர் கண்ணம்மா படம் வந்து 61 வருடங்கள் ஆகிறது. ஒரு லெஜண்ட் சினிமா துறைக்குள் அறிமுகமாகி இருக்கிறார். சினிமா துறையில் இந்த சிறந்த மனிதரின் பெயரை எந்த சினிமா சாதனைகளும் மிஸ் செய்யவே முடியாது" எனக் கூறியிருக்கிறார்.

 

பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பதிவிட்டு இருக்கும் ட்வீட்டில் இந்த காமன் டிபி புகைப்படம் பற்றி பாராட்டி பேசி இருக்கிறார். தற்போது இருக்கும் கமல்ஹாசன் கையில் களத்தூர் கண்ணம்மா குழந்தை நட்சத்திரமாக இருந்த கமலஹாசன் அமர்ந்திருப்பது போல அந்த புகைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது பற்றித் தான் அவர் பேசியுள்ளார். "களத்தூர் கண்ணம்மா முதல் இன்று வரை.. வாழ்த்துக்கள் சார்" என தனஞ்ஜெயன் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் இது போல பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனின் இந்த சாதனைக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.