எனக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு:
எனக்கும் ‘தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
ஷக்தி சிவன் இயக்கி நடித்துள்ள படம் ‘தௌலத்’. இந்தப் படத்தில் ராஷ்மி கவுதம், ஜெயபாலன், அஜய் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக இத்திரைப்படம் தயாரிப்பில் இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் போஸ்டரில் நடிகர் யோகி பாபு மட்டுமே இடம்பெற்றுள்ளார். இதைப்பார்த்த நடிகர் யோகி பாபு அதிர்ச்சியடைந்து, உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
இயக்குநர் யோகி பாபு ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ‘தௌலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக தான் சிறு கதாபாத்திரத்தில் நடித்தால் கூட ஹீரோ என சிலர் விளம்பரப்படுத்துவதாகவும், இதனால் படம் பார்க்க வருபவர்கள் ஏமாற்றமடைகிறார்கள் என்றும் யோகி பாபு வேதனை தெரிவித்துருந்தார். மேலும் இதுபோன்ற பிரச்னைகளால் இனி நடிக்கும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்த நடிகர் யோகி பாபு முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.