சூர்யா ரசிகர்களுக்குடபுள் டிரீட்!! அமேசான் ப்ரைமில் வெளியாகிறது "சூரரை போற்று"!!
நடிகர் சூர்யா நடித்துள்ள "சூரரை போற்று" திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிடுவதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, தெலுங்கு பட நடிகர் மோகன் பாபு மற்றும் கருணாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் "சூரரை போற்று". இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானம் உருவாக்கிய ஜி.ஆர். கோபிநாதன் அவர்களின் வழக்கை வரலாற்றை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் மற்றும் சிக்யா.
சினிமா படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், கொரோனா காரணமாக அனைத்து திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ள இந்த சூழலில் "சூரரை போற்று" படத்தை ஓ.டீ.டீ மூலம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவுசெய்துள்ளது. மேலும் இதனை அக்டோபர் 30ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைமில் வெளியிட முடிவு செய்துள்ளது.