கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற தகவல் தவறானதா??

10 Views
Editor: 0

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைந்தார் என்ற தகவல் தவறானது என்று அவரது மகன் ஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்..

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற தகவல் தவறானதா??

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைந்தார் என்ற தகவல் தவறானது என்று அவரது மகன் ஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதி கொரோனா காரணமாக ஸ்.பி.பி. தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது.மேலும் அவர் அவசர பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்தார்.

SB-Balasubramaniam

இன்று காலை ஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்று செய்தி வெளியானது. அதனை முற்றிலும் மறுத்துள்ளார் அவரது மகன்   ஸ்.பி.சரண். மேலும் அவரது உடல் நிலை குறித்த தகவல் இன்று மாலை அதிகார பூர்வமாக மருத்துவர்கள் வெளியிடுவார்கள் என்றும், அவர் நலம் பெற பிராத்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.