நடிகை சாவித்திரியின் மகளா இது? அம்மாவையும் மிஞ்சிய பேரழகு… யாரும் கண்டிராத பல அரிய புகைப்படங்கள்.
நடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது யாரும் கண்டிராத பல அறிய புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு இணையில்லாத நடிகையாக வலம் வந்த நடிகை சாவித்திரி ரசிகர்கள் கொண்டாடும் பேரழகியாக திரைப்படங்களில் வலம் வந்தார்.
தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்திரிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்ற நிலையில் அவர்கள் சிறுவயதில் குடும்பத்தாருடன் இருக்கும்போது எடுத்துக்கொண்ட பல்வேறு அழகிய புகைப்படங்களை தற்பொழுது சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதில் சாவித்திரியின் மகன் சதீஷ் குமார் பிறந்த குழந்தையாக இருக்கும் போது ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அவரை கையில் தூக்கி வைத்து கொஞ்ச அருகில் விஜய சாமுண்டீஸ்வரி சமத்து குட்டி பெண்ணாக தம்பியை ரசித்தவாறு வெளியிட்டுள்ளார்.
இந்த அழகிய அரிய புகைப்படங்களை விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.