விஜய் மகன் சஞ்சயும், மகள் திவ்யா சாஷாவும், ட்விட்டரில் இருக்கிறார்களா ? உண்மை என்ன ?
விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோ ஆகிற வயசுக்கு வளர்ந்துவிட்டார். சில குறும்படங்களில் இவரே இயக்கி நடித்துள்ளார்.
இதை பார்த்து, சஞ்சையை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குனர்கள் பலரும் படை எடுத்து வருகின்றனர். இவர் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடி இருப்பார். அதன் பின் அவரின் தங்கையும், விஜயின் மகளான திவ்யா சாஷா அவர்கள் தெறி படத்தில் நடித்திருப்பார். தற்போது இவர்கள் இருவரும் பெற்றோர்கள் இருப்பது போல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் போலிக் கணக்குகள் குறித்து விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் கேட்ட போது. ”நடிகர் விஜய் அவர்களின் பெயரில் இருப்பது மட்டும்தான் ஒரிஜினல் ஐடி. விஜய்யைத் தவிர அவர் குடும்பத்தினர் யாரும் ட்விட்டரில் இல்லை. அவர்களின் பெயர்களில் இருக்கும் அனைத்து ஐடிக்களும் போலிகள்தான்.” அதை குறித்து விசாரித்த போது விரைவில் அந்தப் போலிக்கணக்குகளை முடக்குவோம் என்றார்கள்.