TRPயில் தனது வேட்டையை தொடங்கிய சன் நிறுவனம்!!
தற்போது இருக்கும் சூழலில் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்டஒரே தொலைக்காட்சி சன் டிவி மட்டும்தான்.
நிகழும் கொரோனா லாக் டவுனில் பிற தொலைக்காட்சிகள் பிடித்த இடத்தை விட சன் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. BRAC இந்திய நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் முதல் இடத்தை விட்டு சரியாமல் தக்க வைத்துக்கொண்டு இருப்பது சன் நிறுவனம்.
சன் நிறுவனத்தை ஒட்டி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் TRPயில் அடுத்த இடத்தில உள்ளது இதற்காக புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தனது TRPயை அதிகரிக்க சன் நிறுவனம் மாபெரும் விஷயத்தை செய்துள்ளது. அதாவது தமிழில் இனி வெளியாக விருக்கும் 36 திரைப்படங்களை சன் நிறுவனம் வாங்கியுள்ளதாம். அந்த 36 படங்களையும் சுமார் ரூ.175 கோடியை முன் பணமாக கொடுத்து சன் நிறுவனம் வங்கியுள்ளதாம்.
இந்த செயலால் சன் நிறுவனத்தின் TRP ரேட்டிங் உச்சத்தை அடையும் என்பதில் சந்தேயகம் இல்லை.