இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபா வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது
இந்நிலையில், தங்கலான் படத்தை ஒ.டி.டியில் வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், புத்த மதத்தை புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால், படம் ஒ.டி.டியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.