ஆவணி மாத ராசிபலன்- 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு...

25 Views
Editor: 0

ஆவணி மாத ராசிபலன்- 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு..

மேஷம்:

Mesham Rasiமேஷராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றியைத் தரும் அளவிற்கு உற்சாகத்தோடு இருக்கப் போகின்றது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தத் தொழில் முன்னேற்றத்தோடு செல்லும். நீண்ட நாட்களாக வசூலாகாத கடன் தொகை வசூலாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனை நீங்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சாதிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தை இந்த மாதம் சாதித்துக் கொள்ளலாம். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்:

Rishabam Rasiரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வாய்ப்புகள் தேடி வரக்கூடிய மாதமாக இருக்கும். அதை பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்திக் கொள்ளாததும் அவரவர் கையில்தான் உள்ளது. சம்பள உயர்வு, பதவி உயர்வோடு இடமாற்றம் கிடைத்தால் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய எல்லா வேலைகளும் வெற்றியில் முடியும். அதற்கான பாராட்டும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை மட்டும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. வார்த்தைகளில் நிதானம் தேவை. வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு நன்மையை தரும்.

மிதுனம்:

midhunamமிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றது. உங்களது சொந்த தொழிலில் புதியதாக முதலீடு செய்யலாம். தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்கலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பிரச்சனைகளில் மன உறுதியோடு செயல்பட்டு போராடி வெற்றியை கைப்பற்றுகிறார்கள். இதனால் நல்ல வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரப் போகிறது. வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கலாம். ஆக மொத்தத்தில் இந்த மாதம் வெற்றிக்கனியை கட்டாயம் பறிப்பீர்கள். ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கடகம்:

Kadagam Rasiகடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக தான் இருக்கப் போகின்றது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் அதற்கான பாராட்டு கிடைக்கவில்லை, அதற்கான ஊதியம் கிடைக்கவில்லை, என்று கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் பாராட்டு குவிய போகிறது. பண மழை பொழிய போகின்றது என்று சொல்லலாம். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடத்தில் மட்டும் சற்று கவனமாக பேசுங்கள். முன் கோபம் வேண்டாம். வருமானம் அதிகமாக இருக்கும். அனாவசிய செலவை குறைத்து சேமிக்க பாருங்கள். தினம்தோறும் ஆஞ்சநேயரை மனதார நினைத்து வேண்டி வழிபடுவது மிகவும் நல்லது.

சிம்மம்:

simmamசிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் அற்புதமான மாதமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எதிர்பாராத அளவிற்கு உங்களுடைய பணத்தேவை பூர்த்தியாகும். உங்கள் மனதில் இதுநாள் வரை, எதையோ இழக்கப் போவதாக ஒரு சஞ்சலம் இருந்திருக்கும். அது உங்கள் கையை விட்டுச் செல்லாது. உங்களுக்குப் பிடித்தமான வேலையாக இருந்தாலும் சரி, சொத்தாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் அது உங்கள் கையிலேயே தான் இருக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு மகிழ்ச்சியைத் தரும்.

கன்னி:

Kanni Rasiகன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் சற்று கவனமாக இருக்கவேண்டிய மாதமாக பிறக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும், அதில் உள்ள நல்லது கெட்டதை தெரிந்துகொண்டு அதன் பின்பு அந்த வேலையை தொடங்குவது நல்லது. ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டு, பின்னால் யோசிப்பதில் பிரயோஜனமே கிடையாது. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவை எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வார்த்தைகளை கவனமாக பேசுங்கள். பண பரிமாற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு வெற்றியை தேடித்தரும்.

துலாம்:

Thulam Rasiதுலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் தரும் மாதமாக தான் இருக்கப் போகின்றது. இதுநாள்வரை தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள், இனிவரும் நாட்களில் சுமூகமாக முடிவடையும். நீங்கள் தோற்று விடுவீர்கள் என்று ஆரம்பித்த செயல்கள் எல்லாமும் இனி வெற்றியை தொடும். மகிழ்ச்சியான மாதம் தான் இது. அமைதியோடு பொறுமையோடு சிந்தித்தால் பெரிய வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. உண்டு நேரமும் காலமும் அந்த அளவிற்கு கூடி வந்துள்ளது. பதறாத காரியம் சிதறாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

virichigamவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுபமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற போகின்றது. உறவினர்களின் வருகை வருவதும் போவதுமாக இருக்கும். உற்சாகத்தோடு எல்லா வேலைகளையும் செய்து முடிக்கப் போகிறீர்கள். இருப்பினும் எந்த இடத்தில் எதை எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்று கவனத்தோடு பார்த்து பேசுவது நல்லது. வார்த்தையினால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலும், வியாபாரத்திலும், அலுவலகத்திலும், சொந்தபந்தங்களிடத்திலும், எல்லா இடத்திலும் வார்த்தையில் கவனம் தேவை. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

Dhanusu Rasiதனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் நிதானத்தோடு செயல்பட வேண்டிய மாதம் என்றே சொல்ல வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாஸ்க் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து சென்றால் சமாளித்து விடலாம். பைரவர் வழிபாடு மிகவும் நல்லது.

மகரம்:

Magaram rasiமகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கப்போகின்றது. இதுநாள்வரை உங்களை மதிக்காதவர்கள் கூட இனி வரும் நாட்களில் உங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்களது அருமை பெருமைகள் உங்களை சுற்றி உள்ள உறவினர்களுக்கு புரிய ஆரம்பிக்கும். பொறுமையோடு இருக்க வேண்டிய நேரம் இது. உங்களது குழந்தைகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடம் செல்லாமல் அவர்கள் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பதையும் ஒரு பக்கம் பாருங்கள். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

கும்பம்:

Kumbam Rasiகும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் எந்த செயலில் ஈடுபட்டாலும் எவரையும் நம்பி முழுப்பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். குறிப்பாக பணவிஷயத்தில் பிறரை நம்பி ஏமாந்தது போதும் என்பதை உணருங்கள். பொறுமையோடு நீங்கள் பேசும் வார்த்தைக்கு சக்தி அதிகம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். உங்களது திறமை வெளிப்படும். சனிக்கிழமை நரசிம்மர் வழிபாடு நன்மையை தரும்.

மீனம்:

meenamஇதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இந்த மாதம் உங்களை தேடி வரும். அதை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. வருமானம் இருந்தாலும் அதை சிக்கனத்தோடு செலவு செய்வது நல்லது என்பதை நீங்களே உணரவேண்டும். வீட்டில் குழந்தைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். எதிரிகளின் மூலம் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. உஷாராக இருங்கள், சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதி வழிபாடு நன்மையை தரும்.