விநாயகர் சதுர்த்தி அன்று சொல்லப்பட வேண்டிய மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள் மொத்தமாக இதோ உங்களுக்காக!
விநாயகரை வழிபடும் பொழுது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், 108 போற்றிகள் இந்தப் பதிவில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைகள் செய்யும் பொழுது உச்சரித்தால் சகல சம்பத்துகளும் கிட்டும் என்பது ஐதீகம். அதில் குறிப்பாக விநாயகர் 108 போற்றி தினமும் கூறுபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்காது என்பார்கள். இவற்றை முழுமையாக மனப்பாடம் செய்து விநாயகரின் அருளைப் பெற்றுக் கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
விநாயகர் சகஸ்ரநாமம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே!
விநாயகர் ஸ்லோகம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
கணபதி ஸ்லோகம் 1:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.