வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க, குலதெய்வம் உடனே உங்கள் வீட்டிற்கு வரும்.

20 Views
Editor: 0

வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க, குலதெய்வம் உடனே உங்கள் வீட்டிற்கு வரும். இந்த 1 எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்தால்!.

வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க, குலதெய்வம் உடனே உங்கள் வீட்டிற்கு வரும். இந்த 1 எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்தால்!

தேவலோகக் கனி என்று சொல்லக்கூடிய இந்த எலுமிச்சை பழத்திற்கு மந்திர சக்தியை விரைவாக ஈர்க்கக்கூடிய, ஈர்ப்பு தன்மை அதிகமாகவே இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். கண்திருஷ்டி பட்டு விட்டால் கூட, எலுமிச்சை பழத்தை எடுத்து அதன் மீது, ஒரு கற்பூரம் வைத்து சுற்றி உடைத்து விட்டால் நம்மைப் பிடித்த, எதிர்மறை ஆற்றல் அனைத்தும், நம்மை விட்டு நீங்கி, உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போல் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எலுமிச்சை பழத்தை, சரியான முறையில் நாம் பயன்படுத்தினால், நாம் வேண்டிய வேண்டுதலை சுலபமான முறையில், இறைவனிடம் சொல்லி நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

lemon1அந்த இறைவனை, இந்த எலுமிச்சைப்பழத்தில்  கொண்டுவந்து அமரச் செய்து, வேண்டிய வரத்தை, சுலபமாக பெற்றுவிட முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதோடு மட்டும் அல்ல, நம்முடைய குல தெய்வம் நம் வீட்டிற்கு உடனடியாக வந்து, நம்மை ஆசிர்வாதம் செய்யவும் இந்த குறிப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். மந்திர தந்திரம் எல்லாம் கிடையாது. எலுமிச்சை பழத்தின் சக்தியை வைத்து, நம்முடைய வீட்டிற்கு இறைவனை அழைக்க செய்து, வரத்தினை பெறப் போகின்றோம். அவ்வளவு தான். நினைத்த காரியத்தை, நினைத்த மார்க்கத்தில், நிறைவேற்றிக்கொள்ள எலுமிச்சை பழத்தை வைத்து எப்படி வழிபாடு செய்யப் போகின்றோம், என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ள போகின்றோம்.

காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, ஒரு எலுமிச்சை பழத்தை மட்டும் உங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில், குளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. முகம் கை கால்களை கழுவிவிட்டு, இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். எலுமிச்சைப் பழத்தை எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் வைத்து, மூடிக் கொண்டு கிழக்கு பார்த்து அமர்ந்து கொண்டு, கண்களை மூடி ‘ஓம் குல தேவதா நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும். மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை மனதார மூன்று முறை சொல்லிக் கொள்ளுங்கள்.

pachai-ammanஅடுத்தபடியாக அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் கைகளிலேயே வைத்துக்கொண்டு, இரண்டாவது இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் ‘ஓம் சர்வ தேவதா மம வசம் குறுகுறு ஸ்வாகா’ இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்தால் போதும். இப்படியாக காலை 6.00 மணிக்கு முன்பாக ஒரு எலுமிச்சை பழத்தை உங்கள் கைகளில் வைத்து, மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். குல தெய்வத்தையும் மனதார நினைத்து வேண்டிக்கொண்டு, உங்களுக்கு என்ன வேண்டுதல் இருந்தாலும், அந்த வேண்டுதலை சீக்கிரமே நிறைவேற்றி தரவேண்டும் என்றவாறு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

சீக்கிரமாக திருமணம் நடக்க வேண்டும், பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும், தீராத நோய் தீர வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும், சொந்த நிலம் வாங்க வேண்டும், சொந்த வாகனம் வாங்க வேண்டும், குழந்தைப்பேறு கிடைக்க வேண்டும். இப்படியாக என்ன வேண்டுதல் வேண்டுமென்றாலும் நீங்கள் இந்த எலுமிச்சை பழத்திடம் வைக்கலாம். அந்த எலுமிச்சை பழம், அந்த வேண்டுதலை உங்களுக்கு கட்டாயம் நிறைவேற்றித் தரும். ஆனால் ஏதாவது ஒரு வேண்டுதலை வையுங்கள்.

உங்களுடைய வேண்டுதல் நிறைவேற உங்களுடைய விடாமுயற்சியையும் கட்டாயம் தொடர்ந்து செய்துவர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு முறை, ஒரே நாள் இந்த பரிகாரத்தை செய்து விட்டால் பலன் அடைந்து விடலாமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் கட்டாயம் எழும். ஆனால், அவர் அவருடைய மன உறுதியைப் பொறுத்து, மன ஒருமைப்பாட்டைப் பொருத்து, பிரார்த்தனை வைப்பதில் இருக்கக்கூடிய நம்பிக்கையைப் பொறுத்து, 11 நாட்களில் இருந்து 21 நாட்களுக்குள் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஆரம்பிக்கும்.

om manthiram

தினம்தோறும் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய எலுமிச்சை பழத்தை எடுத்து மந்திரத்தை உச்சரிக்க தொடங்குங்கள்.

om manthiramஇந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கியதும் உங்கள் வீட்டு குல தெய்வம், கட்டாயம் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து, எலுமிச்சைபழ ரூபத்தில் உங்கள் வீட்டில் குடி கொண்டு, உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற உதவி செய்யும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்று, உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற பிரார்த்தனையை வைத்து, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.