கோயிலுக்கு செல்வதால் நம் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி, நிம்மதி ஏற்படுவது வழக்கம்.கோயில் என்பது வெறும் இறை வழிபாடு மட்டும் என்பதை தாண்டி அதில் பல அறிவியல் காரணங்களும் நிறைந்துள்ளன.
கோயிலுக்கு தொடர்ந்து செல்வதால் பல நன்மைகள் நம் மனம் மற்றும் உடல் ரீதியாக ஏற்படுகிறது. எத்தனை முறை நாம் நமக்கு விருப்பமான கோயில்களுக்கு சென்றால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை இங்கு பார்ப்போம்...
3 முறை தொடர்ந்து கோயிலுக்கு செல்வதால் மும்மூர்த்திகளான படைக்கும் கடவுள் பிரம்மன், காக்கும் கடவுள் மகா விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.
5 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் உடலில் இருக்கும் அனைத்து வியாதிகளும் நீங்கும்.
7 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் திருமணம் ஆகதவர்களுக்கு விரைவாக வரன் கை கூடி வரும்.
11 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் நம்முடைய உடலும் உள்ளமும் தூய்மை அடையும்
13 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் எந்த காரியத்தை நினைத்து வழிபடுகிறோமோ அந்த காரியம் கைகூடும்.
21 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் குழந்தை பேறு நிச்சயமாக கிடைக்கும்.
33 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு செல்வதால் ஒரு சிவ ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்த பலன் கிடைக்கும்.
77 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு செல்வதால் ஒரு சத்ர யாகம் செய்த பலன் அடையலாம்.
108 நாட்கள் தொடர்ச்சியாக கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி வருவதால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் பெறலாம்.
ஒருவர் 1008 நாட்கள் தினமும் கோயிலுக்கு சென்று வருபவர் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.
இது ஒருபுறம் இருக்க ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வருபவருக்கு இந்த உலகில் கிடைக்காத வஸ்து என்று எதுவும் இல்லை.