செல்வ வளத்தை தரும் இந்த 2 செடிகளை இந்த திசையில் வைத்து பாருங்கள்! இன்னும் அதிர்ஷ்டம் வரும்.

14 Views
Editor: 0

செல்வ வளத்தை அதிகரிக்க செய்ய ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான செடி வகைகள் ஏராளமாக இருக்கின்றன..

செல்வ வளத்தை தரும் இந்த 2 செடிகளை இந்த திசையில் வைத்து பாருங்கள்! இன்னும் அதிர்ஷ்டம் வரும்.

செல்வ வளத்தை அதிகரிக்க செய்ய ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான செடி வகைகள் ஏராளமாக இருக்கின்றன. அவைகள் அந்தந்த நாட்டிற்குரிய அதிர்ஷ்ட செடிகளாக இருக்கும். அதைக் கொண்டு வந்து எல்லோரும் எல்லா நாட்டிலும் பயன்படுத்துவது என்பது எவ்வளவு சரியாக இருக்கும் என்பது கேள்விக்குறி தான். அதற்கு உதாரணமாக மணி பிளான்ட் கூறலாம். மணி பிளான்ட் மேலை நாட்டு செடி வகைகளில் ஒன்று தான். அது அந்த நாட்டில் அதிர்ஷ்டத்திற்கு உரிய செடியாக இருந்திருக்கலாம்.

money plantஅது நம்முடைய நாட்டிலும் அதிர்ஷ்டம் ஏற்படுத்துமா? என்று கேட்டால் யாருக்கும் பதில் தெரியாது. நம்முடைய அதிர்ஷ்ட செடி வகைகளையும் மேலை நாட்டினரும் பயன்படுத்துவார்கள். இப்படி மாற்றி பயன்படுத்தி பார்ப்பதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. எல்லோரும் நல்ல நோக்கத்துடன், நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இதை செய்கிறோம். அதில் எந்த தவறும் கூறுவதற்கு இல்லை. ஆனால் உண்மையில் நம்முடைய நாட்டிற்கு எந்த செடிகள் அதிர்ஷ்டம் தரும்? அதை எந்த திசையில் வைக்க வேண்டும்? ஏன் அவை நமக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்? என்பதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்முடைய நாட்டை பொறுத்தவரை அனைத்து தெய்வங்களுக்கும் வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து வருகிறோம். வாசனை இல்லாத மலர்கள் தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்துவார்கள் தவிர அவைகள் நல்ல அதிர்வலைகளை உண்டாக்குவதில்லை. எல்லா செடி வகைகளும் நமக்கு சுத்தமான காற்றை தருபவை தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வாஸ்து என்று வந்து விட்டால் அதற்குரிய சாஸ்திரத்தை கடைபிடித்தால் மட்டுமே நமக்கு அதிர்ஷ்டம் வரும்.

vastu 1வாஸ்து திசைகள் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அது போல் ஜோதிடத்திலும் திசைகள் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த இரண்டு வகைகளிலும் சொல்லப்பட்டுள்ள முக்கியமான விஷயம் என்று பார்த்தால் அது முல்லை செடியை சொல்லலாம். முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் என்ற பழமொழியும் உண்டு. அந்த அளவு சிறப்பு வாய்ந்த முல்லை செடியை குருவின் அம்சமாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. குரு பார்வை இருந்தால் நமக்கு எந்த அளவிற்கு நன்மைகள் விளையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். குருவின் அருள் இருந்தால் தான் நம்முடைய சந்ததியினர் நலமுடன் வாழ முடியும்.

அது போல் மல்லி செடியை சுக்கிரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒருவன் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன், சந்தோஷமாக, உற்சாகத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை சுக்கிரனின் பலத்தால் தான் பெறுகிறான். சுக்கிரனுடைய இடம் சரியாக அமைந்திருந்தால் அந்த ஜாதகன் அதிக அளவில் உற்சாகத்துடன் சந்தோஷமாக இருப்பான். உலகில் கிடைக்க கூடிய சிற்றின்பம் அனைத்தையும் அனுபவிப்பான் என்பார்கள். அத்தகைய சுக்கிரனின் அம்சம் பொருந்திய மல்லிச் செடி தெய்வாம்சம் பொருந்திய செடியாக இருக்கிறது.

mullaiஆக முல்லை மற்றும் மல்லி செடியை வீட்டில் வளர்ப்பதால் குரு மற்றும் சுக்கிரனின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும். இதனால் வீட்டில் செல்வ வளம் உயரும் என்பது நிதர்சனமான உண்மை. முல்லை செடியை பொறுத்தவரை வடக்கு திசையில் வைப்பது மிக மிக நல்லது. வடக்கு திசையில் சிறிதளவு இடமிருந்தாலும் அதை கொடியாக மேலே படர விட்டு விடலாம். மல்லி செடியின் திசையாக தெற்கு திசையும், வடக்கு திசையும் சிறந்ததாக கூறப்பட்டுள்ளது.

jasmineவீட்டின் அமைப்பு எப்படி இருந்தாலும் எந்த திசையில் இருந்தாலும் பரவாயில்லை. செடிகள் வைக்கும் திசை மட்டும் இந்த திசையில் வைத்து பாருங்கள். அதுபோல் மல்லிகையும், முல்லையும் ஒன்றாக வைக்கக் கூடாது. இரண்டும் வெவ்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால், அதற்குரிய திசைகளில் ஒன்றிற்கொன்று பாதகமில்லாமல் வளர்த்து வரவேண்டும். காடு போல் வளர்க்காமல் அவ்வப்போது அதன் கிளைகளை வெட்டி விட்டு, பார்ப்பதற்கே அம்சமாக இந்த இரண்டு செடிகளை மட்டும் நீங்கள் வீட்டில் வளர்த்தால் மகாலட்சுமியின் கடாட்சம் வீடு முழுவதும் பரவி செல்வ வளம் மென்மேலும் பெருகும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

கோவில்கள்