உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா?

15 Views
Editor: 0

உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா? உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த தீர்த்தத்தை 3 நாள் குடித்தாலே போதும்..

உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா? உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த தீர்த்தத்தை 3 நாள் குடித்தாலே போதும்.

வாக்கு என்று சொன்னதும், அருள்வாக்கு சொல்லுவது, குறி சொல்வது, என்று தவறாக நினைத்து விடாதீர்கள். நாம் எண்ணும் எண்ணங்கள், வார்த்தையாக வெளிவரும்போது, அந்த வார்த்தைகளுக்கு உயிர் கிடைக்க வேண்டும். ‘வாய் உள்ளவர்கள், எப்படி வேண்டுமென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள் என்று சொல்வார்களே’ அதற்காகத்தான்! நம்முடைய மனதில் தோன்றக்கூடிய நல்ல எண்ணங்கள் வெளிப்படும்போது, நாம் சொல்கின்ற நல்ல விஷயங்கள், நினைக்கின்ற நல்ல காரியங்கள், இவை அனைத்தும், சரியான முறையில் வெளிப்பட்டு, பலிக்க வேண்டும் என்றால், நம் நாக்கை, நாமே வசியப்படுத்தி வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

speakingவசியப்படுத்தி கொள்வது என்றதும் உடனே, அதையும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நம் நாவில் இருந்து வெளிவரக்கூடிய நல்ல வார்த்தைகள் அனைத்தும், பலிப்பதற்கு, நம் வீட்டிலேயே, நம் கையாலேயே தீர்த்தத்தை தயார்செய்து, நம் நாக்கை பக்குவப்படுத்த போகின்றோம். அந்த தீர்த்தத்தை எப்படி தயாரிப்பது, என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இதற்கு தேவையானது இரண்டே பொருட்கள் தான். ஒன்று தர்பைபுல், இரண்டாவது அருகம்புல். ஒரு டம்ளர் தண்ணீர் தேவை. உங்கள் வீட்டு பூஜை அறையில், குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொண்டு, சிறிதளவு தர்ப்பைப் புல்லை துண்டு துண்டுகளாக வெட்டி, சிறிதளவு அறுகம்புல்லைறும் சிறு துண்டுகளாக கிள்ளி, ஒரு டம்ளர் அளவு சுத்தமான தண்ணீர் எடுத்து, அதில் போட்டு ஊறவைத்து விடுங்கள். அந்த டம்ப்ளரை ஒரு மூடி போட்டு மூடி விடுங்கள். காலையில் இந்த தண்ணீரை தயார் செய்து வைத்துவிட்டு, மாலை அந்த தண்ணீரை நன்றாக வடிகட்டி குடித்து விடுங்கள்.

tharpai-1இதேபோல், மூன்று நாட்கள் தொடர்ந்து, இந்த முறையைப் பின்பற்றினாலே போதும். நீங்கள் பேசும் விதத்தில் நீங்களே வித்தியாசத்தை உணரலாம். பயம் அற்ற, துடிப்பான, தெளிவான பேச்சு உங்கள் நாவில் இருந்து வெளிப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுடைய வாக்கு திறமை அதிகரிக்கும். உங்களுடைய சொல்லிற்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளுக்கு உயிர் கிடைக்கும். அதாவது, இதுநாள் வரை உங்களுடைய பேச்சுக்கு செவிசாய்க்காதவர்கள் கூட, இனி நீங்கள் சொல்வதை, காது கொடுத்து கேட்டு, அதன்படி செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில்கள்