சாமி கும்பிட்ட பிறகு தான் உங்கள் வீட்டில் சண்டை வருகிறதா? அதை அப்படியே விட்டு விடக்கூடாது. குடும்பத்திற்கு தான் ஆபத்து!
சில பேரது வீடுகள் எல்லாம் சொல்லுவார்கள், ‘நேற்று அப்போதுதான் சாமி கும்பிட்டு முடித்தோம், அதுவரை சண்டை சச்சரவு இல்லாமல், சந்தோஷமாக இருந்த குடும்பத்தில், பூஜை முடிந்த பின்பு, பெரிய சண்டை வந்து விட்டது’. சில மனைவிமார்கள் எல்லாம் சொல்லுவார்கள், என்னுடைய கணவர் எப்போதுமே கோபமாக பேச மாட்டார். ஆனால் சில சமயங்களில் மட்டும், குறிப்பாக வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்த பின்பு, அவர் ஏன் தான் இப்படி கோபமாக நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை.
சில பேரது வீடுகளில், சிறிய அளவிலான விசேஷங்கள் நடந்தால் கூட, அடுத்தபடியாக பெரிய அளவிலான கைகலப்பு, தகராறு ஏற்பட்டு விடும். சிலபேருக்கு வீடுகளில் எல்லாம் சுப காரியங்கள் நடப்பதற்கு முன்பே, பெரிய பிரச்சினை வரும். இப்படியாக நிம்மதியாக இருக்கின்ற குடும்பத்தில் எதனால் பிரச்சனை ஏற்படுகிறது என்றே புரியாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இதுவே பெரிய மன பயமாக இருக்கும். ‘அச்சச்சோ, நாளைக்கு சாமி கும்பிட போறோமே! நம்ம வீட்ல என்ன பிரச்சனை வரப் போகின்றதோ! என்று குழப்பத்திலேயே இருப்பார்கள்.’ நிறைய பேர் வீடுகளில் இன்றும் கூட இந்தப் பிரச்சனை இருக்கின்றது.
இப்படிப்பட்ட பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுடைய, ஜாதக கட்டமும் சுத்தமான, ஜாதகமாகத்தான் இருக்கும். நேரமும் நன்றாகதான் இருக்கும். பிரச்சினைகளுக்கான காரணம் தான் என்ன என்று புரியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு என்ன காரணம். இப்படிப்பட்ட இனம்புரியாத பிரச்சினைகளுக்கு என்ன தான் தீர்வு! என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நம்மை அறியாமலேயே நாம் செய்த பாவங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது நாம் வீதிகளில் செல்லும் போது, அடுத்தவர்களுடைய எதிர்மறை ஆற்றல்கள் அல்லது அடுத்தவர்களுடைய கழிப்போ நம்மை தாக்கி இருக்கலாம். அடுத்தவர்களுக்கு திஷ்டி சுத்தி போட்ட கழிப்பை, நாம் மிதித்து இருக்கலாம். இப்படி அடுத்தவர்களுக்கு செல்லக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் கூட, நம்மை தாக்குவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளது. கிராமப்புறங்களில் இதனை எச்சில் கோளாறு என்று சொல்லுவார்கள். இந்த கோளாறு நம் வீட்டில் தங்கி விடும். இந்த பிரச்சனையை அப்படியே விட்டு விடக்கூடாது. பாதிப்பு போகப்போக பெரியதாகிவிடும்.
இந்த தோஷத்தை நீக்க, தேவையான இரண்டு பொருட்கள் மருதாணி விதையின் பொடி, கொட்டைப் பாக்கை இடித்து தயார் செய்யும் பொடி. மருதாணி விதையும் பொடி நாட்டு மருந்து கடைகளில் விற்கும். கொட்டைப் பாக்கை ஒன்றும் இரண்டுமாக உங்கள் கைகளிலேயே இடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே மருதாணி செடி மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. மருதாணி செடியின் விதையில் கெட்ட சக்தி அண்டாது, என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய பேர் வீடுகளில் மருதாணி செடியை வாசல் முன்பு வளர்ப்பதற்கும் இதுதான் காரணம்.
அடுத்தபடியாக கொட்டைப்பாக்கு. பாக்கும் மகாலட்சுமி அம்சம் பொருந்திய ஒரு பொருள் தான். துவர்ப்பு தன்மை கொண்ட இந்தப் பாக்கில், தீய சக்தி நுழைய வாய்ப்பு இல்லை. சக்தி வாய்ந்த பொருட்களில் பாக்கிற்க்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இந்த பாக்கி இல்லாமல் வெற்றிலையை யாரும் இறைவனுக்கு படைக்க மாட்டார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. எந்த ஒரு தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி கொட்டைப்பாக்கு உள்ளது.
ஒரு சிறிய எச்சில் படாத பாத்திரத்தில், கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் பொடியை போட்டு, கரைத்துக் கொள்ள வேண்டும். கூடவே ஒரு ஸ்பூன் மருதாணி விதை பொடி, ஒரு ஸ்பூன் கொட்டைப்பாக்கு பொடியை போட்டு கரைத்து விடுங்கள். உங்கள் வீட்டினருகில் மாயிலை கிடைத்தால், மா இலைகளை எடுத்து இந்த தண்ணீரில் தொட்டு மாயிலைகளின் மூலமாகவே, உங்கள் வீடு முழுவதும், குறிப்பாக மூலைமுடுக்குகளில், இடுக்குகளில், இந்த தண்ணீரை தெளித்து விடலாம். மாயிலை கிடைக்கவில்லை என்றால் கைகளால் எடுத்து தெளிந்துகொள்ளலாம்.
வீட்டில் பூஜை அறை, ஹால், பெட்ரூம் இப்படி வீடு முழுவதும் இந்த தண்ணீரை தெளித்து விட்டு, உங்கள் மேலும் கொஞ்சம் தண்ணீரை தெளித்து விடுங்கள். உங்கள் வீட்டில் கணவர், குழந்தைகள் அந்த சமயத்தில் இருந்தால், அவர்கள் மீதும் இந்த தண்ணீரை தாராளமாக தெளிக்கலாம் தவறொன்றும் கிடையாது.
ஆனால், முடிந்தவரை இந்த தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்தது விட்டு உங்களுடைய வீட்டின் கதவு ஜன்னல்களை சாத்திவிட்டு, வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒரு 1/2 மணி நேரம் வெளியே இருப்பது நல்லது. வீட்டை தனியாக விட்டுவிட்டு வெளியே பூட்டி விடுங்கள். இந்த தீர்த்த தண்ணீரை தெளிப்பதன் மூலம், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள், தோஷங்கள் அனைத்துமே கண்ணுக்குத் தெரியாமல், காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரை மணி நேரம் கழித்து, நீங்கள் வீட்டிற்குள் வந்ததும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஸ்நானம் செய்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதாவது நல்ல தண்ணீரில் ஒரு சிட்டிகை சாதாரண கற்பூரத்தை போட்டு, (பச்சைக் கற்பூரம் போட்டு வீடு துடைக்க கூடாது) கொஞ்சமாக கல்லுப்பு சேர்த்து அந்த தண்ணீரை கரைத்து விட்டு வீடு முழுவதும் முடிந்தால் கழுவி விடுங்கள். இல்லை என்றால் மாப் போட்டுக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம்தான்.
அதன் பின்பு பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு, சாமிக்கு அலங்காரம் செய்து பூஜை ஜாமான்களை தேய்த்து, மஞ்சள் குங்குமம் வைத்து தீபம் ஏற்றி மனநிறைவோடு இறைவனை வழிபடுங்கள். என்ன பிரச்சனையாக இருந்தாலும், இந்த பரிகாரம் செய்வதன் மூலம் அதற்கான ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த பரிகாரத்தை எந்த கிழமை எந்த நாளில் வேண்டுமென்றாலும் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு திருமணத்தடை, கடன் பிரச்சனை, வேலை இல்லாமல் பணப்பிரச்சனை, என்று பல பிரச்சினைகளுக்கும் இது விடை சொல்லும்.